Tamil news Sri Lanka

விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய PCR பரிசோதனை கூடத்தால் சர்ச்சை


கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய PCR பரிசோதனை கூடம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு வருகைத்தரும் பயணிகளுக்காக தற்போது பழைய முறையிலேயே அங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கான கொள்ளளவு தொடர்பில் ஆராய வேண்டும் என்பதுடன் அதனை தொடர்ச்சியாக செயற்படுத்த வேண்டுமாயின் பல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய PCR பரிசோதனை கூடம் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் 3 மணித்தியாலங்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறும் எனவும், இது நாட்டுக்கு வருகைத்தருவோருக்கு செலவுகளை குறைக்கவும், சிரமங்களை கட்டுப்படுத்தவும் உதவு என சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்னதாக தெரிவித்திருந்தார்.

எனினும், இந்த புதிய PCR பரிசோதனை கூடம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவில்லை என ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



Source link

Related posts

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் வெளிவந்த புதிய செய்தி!

Rohan

இது தான் பிரச்சினை! நான் கைச்சாத்திடப் போவதில்லை – உதய அதிரடி

Rohan

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy