Tamil news Sri Lanka

நாக்கை இரண்டாக்கி, சத்திர சிகிச்சை செய்த தமிழ் இளைஞன் – பொலிஸ் விசாரணைகள் தீவிரம் (PHOTOS)


சத்திர சிகிச்சை மூலம் தனது நாக்கினை இரண்டாக பிளந்த நிலையில், அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிரந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இந்த இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு நாக்கினை இரண்டாக பிளந்துள்ளமை, சமூக வலைத்தள பதிவுகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் நகரில் பச்சை குத்தும் நிலையமொன்றை இந்த இளைஞன் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் காலிக்கு சென்று, தனது நாக்கினை இரண்டாக பிளக்கும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாகரிகம் என்ற பெயரில் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிக ஆபத்தானது என்பதை அடிப்படையாகக் கொண்டு, சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (TrueCeylon)



Source link

Related posts

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

Rohan

முல்லைத்தீவு ஊடகவியலாளர் தாக்குதல் 3 இராணுவ சிப்பாய்கள் கைது

Rohan

எரிவாயு சிலிண்டர் சர்ச்சை l விசாரணைக்கு குழு நியமனம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy