Tamil news Sri Lanka

தியவன்னா ஓயாவில் மிதக்கும் எண்ணெய் படலம்! தயாரானது அறிக்கை


தியவன்னா ஓயாவை நோக்கி மிதக்கும் எண்ணெய் படலம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எண்ணெய் படலம் தொடர்பில் அமைச்சருக்கு கிடைத்த நிழற்படங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இராஜகிரிய முதல் புத்கமுவ பாலம் வரையான பகுதியில், எண்ணெய் படலம் தென்படும் நிலையில், குறித்த அறிக்கையில் அமைச்சருக்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எண்ணெய் படலம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீரின் மாதிரிகளும் விசாரணை குழுவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.



Source link

Related posts

இன்றும் (26) எரிவாயு சிலிண்டர் வெடிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

பெங்களூர் விமான நிலையத்தில் வசமாக சிக்கிய 10 இலங்கையர்கள்!

Rohan

SLPP பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy