Tamil news Sri Lanka

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு, டொலர் கட்டாயமாகும் சாத்தியம்?


வாகன இறக்குமதியின் போது, அறவிடப்படும் வரியை, டொலரில் செலுத்த இணக்கம் தெரிவிப்போருக்கு மாத்திரம், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் தற்போது மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

டொலரில் வரியை செலுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு தேவையான பொருளாதார உபாயங்களை பின்பற்றுவதன் ஊடாக, பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை ஆரம்பிக்கும் திகதி “?”

Rohan

பாகிஸ்தானிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கோரிக்கை

Rohan

மீண்டும் கொழும்பு – யாழ்ப்பாணம் இடையில் விமான சேவை! அமைச்சர் உத்தரவு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy