Tamil news Sri Lanka

அரசாங்கத்திற்கு சஜித் விடுத்த பகிரங்க சவால் – Trueceylon News (Tamil)


உரிய காலத்தில் நடத்த வேண்டிய மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தான் அரசாங்கத்திடம் சவால் விடுப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல்களை நடத்தினால், அரசாங்க தொடர்பில் மக்கள் மத்தியிலுள்ள எண்ணத்தை அறிந்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மக்களின் கருத்துக்களை இந்த சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், மக்களின் எண்ணத்தை அறிந்துக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேசத்திடம் சென்று, தேர்தலை நடத்துவதாக போலி உறுதிமொழிகளை வழங்க வேண்டாம் எனவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

அத்துரெலிய ரத்தன தேரர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

Rohan

நவம்பர் முதலாம் திகதி, குறைந்தளவான கொவிட் உயிரிழப்புக்கள்

Rohan

இணைய பாதுகாப்பு சட்டத்தை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy