Tamil news Sri Lanka

நாட்டின் சில பகுதிகளில் அரிசி தட்டுப்பாடு – Trueceylon News (Tamil)


அரசாங்கத்தினால் அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை மீறி, அதிக விலைகளில் அரிசி விற்பனை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் சில பிரதேசங்களில் அரிசிக்கான தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் நுகர்வோர் கூறுகின்றனர்.

அரிசி விலைகள்

01. சிவப்பு பச்சை அரிசி (1KG)           :- (ரூபா) 95.00 – 100.00 வரை
02. வெள்ளை பச்சை அரிசி (1KG)     :- (ரூபா) 102.00 – 105.00
03. நாட்டரிசி (1KG)                                   :- (ரூபா) 110.00 – 115.00
04. சம்பா (1KG)                                           :- (ரூபா) 115.00 – 125.00

அரிசி ஆலை உரிமையாளர்களினால் விநியோகிக்கப்படும் விலைக்கு அரிசியை கொள்வனவு செய்து, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அரிசி வரையறுக்கப்பட்ட அளவிலேயே விநியோகிக்கப்படுகின்றமையினால், அதிக விலையில் விற்பனை செய்ய வேண்டிய நிலைமை தமக்கு காணப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். (TrueCeylon)



Source link

Related posts

ஐரோப்பிய நாடுகளுக்குள் படையெடுத்தது ஒமிக்ரோன் – Trueceylon News (Tamil)

Rohan

தன் மீது மக்கள் கொண்ட வெறுப்பை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி – இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றும் ஒரு உறுதிமொழி (VIDEO)

Rohan

இலங்கை அணி சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy