Tamil news Sri Lanka

இலங்கையில் முதல் தடவையாக சிறார்களுக்கு தடுப்பூசி இன்று (24) முதல்


12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட தொற்றா நோய் தாக்கங்கள் மற்றும் விசேட தேவையுடைய சிறார்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முதற் தடவையாக இன்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அநுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய வைத்தியசாலைகளிலும் இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

விசேட வைத்தியர்களின் முழுமையான கண்காணிப்பின் கீழ், இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

அதி அச்சுறுத்தலில் மலையக ரயில் மார்க்கம் – Trueceylon News (Tamil)

Rohan

புதுவருட பிறப்பில் (நாளை) விலை குறைக்கப்படும் பொருட்கள் − நிதி அமைச்சு வெளியிட்ட பொருட்களின் விபரங்கள்

Rohan

லிட்ரோ நிறுவனம், நீதிமன்றில் வழங்கிய உறுதி l இனி சந்தைக்கு தரமான எரிவாயு?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy